போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி


போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி
x
தினத்தந்தி 18 March 2022 12:15 AM IST (Updated: 18 March 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி நடந்தது.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் போலீஸ், பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் கைப்பந்து போட்டியில் விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் ஆகிய பகுதிகளிலிருந்து 7 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப்போட்டியில் சிவகாசி ஈவினிங் ஸ்டார்அணி வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றது. விருதுநகர் தாலுகா போலீஸ் அணி 2-வது இடத்தையும், விருதுநகர் எஸ்.என்.பி. அணி 3-ம் இடத்தையும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சனா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

Next Story