கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடந்த நெல் மூட்டைகள்- அரவை மில்களுக்கு கொண்டு செல்லும் பணி மும்முரம்


கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடந்த நெல் மூட்டைகள்- அரவை மில்களுக்கு கொண்டு செல்லும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 18 March 2022 12:18 AM IST (Updated: 18 March 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணராயபுரம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடந்த நெல் மூட்டைகள் அரவை மில்களுக்கு கொண்டு செல்லும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கிருஷ்ணராயபுரம், 
அரசு கொள்முதல் நிலையங்கள்
விவசாயிகள் சாகுபடி செய்த உற்பத்தி பொருளை இடைத்தரகர்கள் இல்லாமல் நல்ல விலை கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அரசு கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் வீரராக்கியம், கட்டளை, கோவக்குளம், மேட்டு மகாதானபுரம் ஆகிய பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
விவசாயிகளும் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை குடோன் மற்றும் அரவை மில்களுக்கு அனுப்பாமல் கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே பல நாட்களாக வெயில் மற்றும் மழையில் நனைந்தது. இதையடுத்து, விவசாயிகள் தார்ப்பாய் மூலம் நெல்மணிகளை மூடி வைத்தனர். மேலும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
அரவை மில்கள்
இந்த நிலையில் கொள்முதல் நிலையத்தில் வெளியே அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை உரிய இடங்களுக்கு கொண்டு செல்லும் பணி தற்போது தொடங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து நெல் கொள்முதல் நிலைய பணியாளரிடம் கேட்டபோது நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த சில நாட்களாக நெல் மூட்டைகள் தேங்கி கிடந்தது.
தற்போது கொள்முதல் நிலையத்தில் இருந்து அரவை மில்களுக்கு கொண்டு செல்லும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இனி நெல் மூட்டைகள் தேங்காத வகையில் அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர் என்றனர்.

Next Story