ரூ. 16 லட்சம் மதிப்பிலான ஒரு டன் எடையுள்ள குட்கா பறிமுதல்
ரூ. 16 லட்சம் மதிப்பிலான ஒரு டன் எடையுள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் ரூ. 16 லட்சம் மதிப்பிலான ஒரு டன் எடையுள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது ெதாடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 பேர் கைது
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மதுரை ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளி முன்பு போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக லாரி ஒன்று வந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் அந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரியில் சாக்கு மூடைகளில் சுமார் 1 டன் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.16 லட்சம் எனக்கூறப்படுகிறது.
இதையடுத்து லாரியில் வந்த இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ராஜா (வயது 21), சேலத்தை சேர்ந்த கண்ணன் (23) என்பதும், சேலத்தில் இருந்து ராஜபாளையத்திற்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
பறிமுதல்
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த சம்பவம் ெதாடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story