தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 18 March 2022 12:21 AM IST (Updated: 18 March 2022 12:21 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

எரியாத விளக்கு
வேர்க்கிளம்பி பேரூராட்சி 14-வது வார்டுக்கு உட்பட்ட காரியமங்கலத்துவிளை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் பல விளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த விளக்குளை அகற்றி விட்டு புதிய விளக்குகள் பொருத்தி எரியவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                               -அகிலா, காரியமங்கலத்துவிளை.
பயணிகள் அவதி 
நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையத்தில் பயணிகள் பயன்படுத்தும் பெரும் பகுதிஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால், பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் நிற்பதற்கு இடம் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பயணிகள் நலன் கருதி பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                      -சித்ரா, கன்னியாகுமரி.
விபத்து அபாயம்
நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் தோப்பு வணிகர் தெரு உள்ளது. இந்த தெரு சாலையின் நடுவே கழிவுநீர் ஓடையின் மீது போடப்பட்டிருந்த மூடி சேதமடைந்து மிக பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன், விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே,  பள்ளத்தின் மேல் மூடி அமைத்து விபத்து ஏற்படாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
                                   -கே.மணிகண்டன், வடசேரி.
காட்சி பொருளான சிக்னல்கள் 
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளாக  செட்டிக்குளம், பீச்ரோடு, கோட்டார், டெரிக், வேப்பமூடு, வடசேரி, ஒழுகினசேரி ஆகிய சந்திப்புகளில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகளவில் இருக்கும். போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும், வாகன ஓட்டிகள் வசதிக்காகவும் இந்த சந்திப்புகளில் சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த சிக்னல் விளக்குகள் எரியாமல் காட்சி பொருளாக காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாவதுடன், விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி முக்கிய சந்திப்புகளில் காட்சி பொருளாக காணப்படும் சிக்னல் விளக்குகளை பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-த.விசால், அனந்தபத்மனாபபுரம்.


Next Story