மாணவியின் புகைப்படத்தை முகநூலில் வெளியிட்ட என்ஜினீயரிங் மாணவர், போக்சோ சட்டத்தில் கைது
மாணவியின் புகைப்படத்தை முகநூலில் வெளியிட்ட என்ஜினீயரிங் மாணவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
கோட்டூர்:
திருத்துறைப்பூண்டி தாலுகா திருவலஞ்சுழி கோட்டகம் கிராமத்தை சேர்ந்த சவுந்திரராஜன் மகன் வீரசேகரன் (வயது19). இவர் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கும், 16 வயதான 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவருக்கும் இடையே முகநூலில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதால் அந்த மாணவி, வீரசேகரனுடன் பழகுவதை நிறுத்தி விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த வீரசேகரன், மாணவி மற்றும் அவரது தந்தை புகைப்படங்களை முகநூலில் வெளியிட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் திருக்களர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தில் வீரசேகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story