போலி டாக்டர் கைது
உவரி அருகே போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
திசையன்விளை:
உவரி அருகே உள்ள பெரியதாழை கிறிஸ்தவ ஆலயம் எதிரில் அமுதசேகரன் எலக்ட்ரோ பதி மருத்துவ கல்லூரி மருத்துவமனை என்ற பெயரில் போலியாக மருத்துவம் செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் நெல்லை மாவட்ட நல பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ஜாண்பிரிட்டோ மற்றும் அதிகாரிகள் நேற்று அந்த மருத்துவமனையை ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த மருத்துவமனை தமிழ்நாடு மருத்துவ ஸ்தாபன சட்டத்தின் கீழ் பதிவு செய்யாமல் மாணவர்களை ஏமாற்றும் வகையில் செயல்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட நல பணிகள் இணை இயக்குனர் ஜாண்பிரிட்டோ உவரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜமால் (பொறுப்பு) வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டம் ஆதனூர் மருந்து வகுடி பாரதியார்நகர் தனசேகரன் மகன் போலி டாக்டரான சிலம்பரசன் (வயது 32) என்பதும், நாகர்கோவிலில் உள்ள மருத்துவ கல்லூரியில் எலக்ட்ரோ பதி ஆப்டெக்னாலஜி படித்துள்ளார் என்பதும், இவர் மீது 12 வழக்குகள் உள்ளது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story