கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் இன்று தேரோட்டம்


கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் இன்று தேரோட்டம்
x
தினத்தந்தி 18 March 2022 12:59 AM IST (Updated: 18 March 2022 12:59 AM IST)
t-max-icont-min-icon

பங்குனி உத்திரத்தையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடைபெறுகிறது.

கரூர், 
பசுபதீஸ்வரர் கோவில்
கரூர் அலங்காரவல்லி, சவுந்திரநாயகி உடனாகிய கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து, நந்தி வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம், பூதகி வாகனம், ரிஷப வாகனம், திருக்கயிலாய வாகனம், யானை வாகனம், குதிரை வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்றது. நேற்றுமுன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
தேரோட்டம்
இந்தநிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி காலை 6.45 மணியளவில் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளி, தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்ய உள்ளனர்.
பங்குனி திருவிழாவையொட்டி தினமும் காலை 7 மணிக்கும், மாலை 6.30 மணிக்கும் சுவாமிகள் திருவீதியுலா நடைபெறுகிறது. மேலும் சொற்பொழிவும், இசைநிகழ்ச்சியும் நால்வர் அரங்கில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story