மனைவியை தாக்கியவர் கைது


மனைவியை தாக்கியவர் கைது
x
தினத்தந்தி 18 March 2022 1:07 AM IST (Updated: 18 March 2022 1:07 AM IST)
t-max-icont-min-icon

மனைவியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

குளித்தலை, 
குளித்தலை அருகே உள்ள வை.புதூர் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (வயது 32). இவரது மனைவி அழகுசெல்வி (29). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் இளையராஜா செலவிற்கு தனது மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்ததாக தெரிகிறது. இதில், ஆத்திரமடைந்த இளையராஜா தனது மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இதுகுறித்து அழகுசெல்வி அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் இளையராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story