3 சிவன் கோவில்களில் பங்குனி உத்திர விழா தேரோட்டம்


3 சிவன் கோவில்களில் பங்குனி உத்திர விழா தேரோட்டம்
x
தினத்தந்தி 18 March 2022 1:33 AM IST (Updated: 18 March 2022 1:33 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் உள்ள 3 சிவன் கோவில்களில் பங்குனி உத்திர விழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ேதரை வடம் பிடித்தனர்.

கும்பகோணம்:
கும்பகோணத்தில் உள்ள 3 சிவன் கோவில்களில் பங்குனி உத்திர விழா  தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ேதரை வடம் பிடித்தனர். 
பங்குனி உத்திர விழா 
கும்பகோணம் நகரில் உள்ள நாகேஸ்வரன் கோவில், ஆதிகம்பட்ட விஸ்வநாதர் கோவில், கொட்டையூர் கோடீஸ்வர‌சாமி கோவில் ஆகிய 3 சிவன் கோவில்களில் பங்குனி உத்திர விழா கடந்த 9-ந்தேதி அந்தந்த கோவில்களில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழா நாட்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. கடந்த 13-ந்தேதி ஓலை சப்பரமும், 15-ந்தேதி இரவு திருக்கல்யாணமும் நடைபெற்றது.
தேரோட்டம் 
இந்தநிலையில் நேற்று காலை நாகேஸ்வரன் கோவில், ஆதிகம்பட்ட விஸ்வநாதர் கோவில், கொட்டையூர் கோடீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பங்குனி உத்திர விழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) மகாமகம் குளத்தில் நாகேஸ்வரர், கம்பட்ட விஸ்வநாத சாமி கோவில்களின் சார்பில் பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் தீர்த்தவாரி வைபவமும், இரவு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. இதேபோல் கொட்டையூர் கோடீஸ்வரசாமி கோவிலின் தீர்த்தவாரி காவிரி ஆற்றில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர். 

Next Story