வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே அரணாரை தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் சங்கர் (வயது 35). இவர் வயிற்று வலி காரணமாக நேற்று முன்தினம் காலை தனது வயலில் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் சங்கரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சங்கர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story