லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில் பங்குனி தேரோட்டம்
லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது.
லால்குடி
லால்குடியில் உள்ள சப்தரிஷீஸ்வரர் கோவில் பங்குனி தேரோட்டம் கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து 8-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை சுவாமி புறப்பாடு மற்றும் நாயன்மார்கள் வீதி உலா நடைபெற்றது. நேற்று தேேராட்டம் நடைபெற்றது.
இதனையொட்டி அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான பெரிய தேரில் சோமாஸ் கந்தர், பெருந்திருப்பிராட்டியார் அம்மன் எழுந்தருளினர். தொடர்ச்சியாக முருகன், விநாயகர், சப்தரிஷிகள் உள்ளிட்ட 4 தெய்வங்களின் தேர் வந்தது. 5 தேர்களையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். காலை 8.30 மணிக்கு தொடங்கிய தேரோட்டம் மாலை 5.45 மணியளவில் நிலையை அடைந்தது.
பக்தர்கள்
இதில், லால்குடி சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ., லால்குடி ஒன்றியகுழு தலைவர் ரவிச்சந்திரன், நகராட்சி தலைவர் துரை மாணிக்கம், நகராட்சி ஆணையர் குமார் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், லால்குடி மற்றும் அதன் சுற்றியுள்ள மணக்கால், கூகூர், சாத்தமங்கலம், ஆகிய கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story