சைபர் கிரைம் குற்றங்களை விசாரிக்கும் அதிகாரிகள் யார்-யார்?
சைபர் கிரைம் குற்றங்களை விசாரிக்கும் அதிகாரிகள் யார்-யார்?-விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மதுரை
சைபர் கிரைம் குற்றங்களை விசாரிக்கும் அதிகாரிகள் யார்-யார்? என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சாட்டை துரைமுருகன் வழக்கு
தமிழக முதல்-அமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகன் ஜாமீனில் வெளிவந்த பிறகு மீண்டும் அவதூறான கருத்துகளை யூ-டியூப்பில் பரப்பியதாகவும், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றும் போலீஸ் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது யூ-டியூப்பில் சர்ச்சைக்குரிய வீடியோக்கள் பதிவேற்றம் செய்வதை தடுப்பது தொடர்பான ஆலோசனைகளை அளிப்பதற்காக வக்கீல் ராமகிருஷ்ணனை ஆலோசகராக நியமிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
விசாரணை அதிகாரிகள் யார்?
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வக்கீல் ராமகிருஷ்ணன் ஆஜராகி, யூ-டியூப் தொடர்பான விதிகள், சமீபத்திய சட்டத்திருத்தங்கள் உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்தார். பின்னர், சைபர் கிரைம் குற்றங்களில் எவ்வாறு நடவடிக்கைகள் எடுக்க முடியும் என நீதிபதியிடம் விவரித்தார்.
அப்போது நீதிபதி, “யூ-டியூப் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பலர் பலன் அடைகின்றனர். இதனால் பல்வேறு சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றது” என கருத்து தெரிவித்தார்.
பின்னர் தமிழகத்தில் சைபர் குற்றங்களை தடுக்க எத்தனை போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர், அவர்களின் விசாரணை அதிகாரிகள் யார்-யார்? என்பது குறித்த தகவல்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்தி வைத்தார்.
Related Tags :
Next Story