பசவராஜ் பொம்மை தலைமையில் கர்நாடகம் வேகமாக முன்னேறுகிறது; ராஜ்நாத்சிங் பேச்சு
பசவராஜ் பொம்மை தலைமையில் கர்நாடகம் வேகமாக முன்னேறுகிறது என்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன விழாவில் பேசிய மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் பேசியதாவது:-
பசவராஜ் பொம்மை தகுதியான, திறமையான முதல்-மந்திரியாக உள்ளார். அவரது தலைமையில் கர்நாடகம் வேகமாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. உலக அளவில் கர்நாடகம் முக்கிய இடம் பிடிக்கும். இந்த 7 மாடி கட்டிடத்தை விரைவாக கட்டுவதற்கு பசவராஜ் பொம்மை போதுமான ஒத்துழைப்பு வழங்கினார். கர்நாடகம் மற்றும் அதன் தலைநகர் எப்போதும் எனது இதயத்திற்கு நெருக்கமாக உள்ளது.
இந்த மாநிலம் பெரிய ஆலமரத்தை போன்றது. இது உயரமாக வளர்கிறது. அதே நேரத்தில் அதன் வேர் ஆழமாக செல்கிறது. அதே போல் கர்நாடகம் தனது கலாசாரம்-பண்பாட்டை தக்க வைத்துள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் இந்த மாநிலம் விண்ணை தொடுகிறது.
இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.
Related Tags :
Next Story