மாட்டு வண்டி போட்டி
ஆரல்வாய்மொழியில் மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழியில் மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது.
ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 11-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று மாட்டுவண்டி போட்டி நடந்தது. போட்டி ஆரல்வாய்மொழி-செண்பகராமன்புதூர் சாலையில் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் நடைபெற்றது.
போட்டியை ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவரும், கோவில் பக்தர்கள் சங்க தலைவருமான முத்துக்குமார், தோவாளை பஞ்சாயத்து தலைவர் நெடுஞ்செழியன், வக்கீல் லெட்சுமி நாராயணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் பல மாவட்டங்களில் இருந்து மொத்தம் 43 மாட்டுவண்டிகள் பங்கேற்றன. நிகழ்ச்சியில், பக்தர்கள் சங்க பொருளாளர் வினு, நிர்வாகிகள் தாணுபிள்ளை, பிச்சை, மாட்டு வண்டி போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் வேலுபிள்ளை, ராமையா, தாணப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இறுதியில் நடந்த பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கினார். முன்னதாக விழாவுக்கு வந்த விஜய் வசந்த் எம்.பி.க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தோவாளை கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் முருகானந்தம், பொதுச்செயலாளர் ராமமூர்த்தி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
------------
Related Tags :
Next Story