ஓய்வு பெற்ற ராணுவவீரரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.75 ஆயிரம் அபேஸ்
ஓய்வு பெற்ற ராணுவவீரரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.75 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்டுள்ளது.
வேலூர்
ஓய்வு பெற்ற ராணுவவீரரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.75 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற ராணுவவீரர்
வேலூரை அடுத்த கீழ்பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சுதாகர். ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது வங்கி கணக்கில் இருந்து கடந்த 14-ந் தேதி ரூ.65 ஆயிரம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போன் எண்ணிற்கு போலியான குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சுதாகர் உடனடியாக இணையதளத்தில் இருந்த வங்கியின் வாடிக்கையாளர் சேவை மைய எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அதில் பேசிய நபர் ஒரு ஆன்லைன் முகவரியை கொடுத்து அதில் வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்யுமாறு கூறினார்.
அதன்படி சுதாகரும், வங்கி விவரங்களை பதிவு செய்தார்.
ரூ.75 ஆயிரம் அபேஸ்
ஒரு சில நொடிகளில் சுதாகரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.49 ஆயிரத்து 999 மற்றும் ரூ.24 ஆயிரத்து 999 என 2 தவணையாக ரூ.74 ஆயிரத்து 998 ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுதாகர் வங்கியில் சென்று கேட்டபோது, அவர் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் மைய சேவை எண் போலியானதும், அதில் பேசியநபர், மோசடிநபர் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து அவர் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் கூறுகையில், வங்கி, ஆன்லைன் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் போன்ற அலுவலகங்களின் வாடிக்கையாளர் சேவை மைய தொடர்பு எண்ணை இணையதளத்தில் தேடிச் சென்று எடுத்து பேசுகின்றனர். இணையதளங்களில் பெரும்பாலான எண்கள் தவறான எண்களாகவே உள்ளது. எனவே அந்த எண்களில் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றனர்.
Related Tags :
Next Story