சூரை கிராமத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்
சூரை கிராமத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
சோளிங்கர்
தமிழகத்தில் 12 வயது முதல் 14 வரை உள்ள பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்று வருகிறகது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டார மருத்துவமனை சார்பில் சூரை அரசு பள்ளியில் 12 வயது முதல் 14 வயது வரை உள்ள மாணவ- மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. முகாமிற்க்கு கொடைக்கல் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா தடுப்பூசி செலுத்தும் முகாமை தொடங்கிவைத்தார்.
இந்த முகாமில் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. பெற்றோரின் சம்மதத்துடன் மாணவிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
Related Tags :
Next Story