வேலூரில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது


வேலூரில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
x
தினத்தந்தி 18 March 2022 5:21 PM IST (Updated: 18 March 2022 5:21 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்

வேலூர் பெருமுகையை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 41), விவசாயி. இவர் பெருமுகை ஆதிதிராவிடர் அரசு பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென வெங்கடேசனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி வெங்கடேசன் பாக்கெட்டில் வைத்திருந்த 500 ரூபாய் பணத்தை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசில் வெங்கடேசன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட வேலூர் ஆர்.எஸ். நகரை சேர்ந்த தனுஷ் (19) வேலூர் சூரிய குளம் பகுதியை சேர்ந்த பாரூக் அலி (26) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.


Next Story