பழங்குடியின மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பழங்குடியின மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 March 2022 5:26 PM IST (Updated: 18 March 2022 5:26 PM IST)
t-max-icont-min-icon

வந்தவாசி தாலுகா அலுவலகம் முன்பு பழங்குடியின மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வந்தவாசி

வந்தவாசியில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் பழங்குடி காட்டுநாயக்கன், இருளர் இன மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி வந்தவாசி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

 ஆர்ப்பாட்டத்துக்கு பழங்குடியின மக்கள் மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பழங்குடியினர் காட்டுநாயக்கன், இருளர் இன மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், 

பழங்குடியினர் நல வாரிய அடையாள அட்டை வழங்க வேண்டும், இருளர் இன மக்களுக்கு நல வாரிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

அப்போது பழங்குடியினர் மக்கள் பாரம்பரியமிக்க பாடல்களை பாடியும், நடனமாடியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் சரவணன் ேபசினார். 

ஆர்ப்பாட்டத்தில் வந்தவாசி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் அப்துல் காதர், ஹரிதாஸ், மாவட்ட செயலாளர்கள் செல்வன் வெங்கடேசன், மாவட்ட துணைச்செயலாளர் தேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story