அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர கும்பாபிஷேகம்
மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது
தென்திருப்பேரை:
மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பங்குனி உத்திர திருவிழா
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலும் ஒன்றாகும். கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் இரவில் உற்சவர் அய்யனார் சப்பரத்தில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினமும் வில்லிசை, இன்னிசை நிகழ்ச்சி, பட்டிமன்றம் போன்றவை நடந்தது.
6-ம் நாளான கடந்த 14-ந்தேதி காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, மதியம் அன்னதானம் நடந்தது.
கும்பாபிஷேகம்
10-ம் நாளான நேற்று சிகர நிகழ்ச்சியாக காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு பங்குனி உத்திர கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் சுனையில் நீராடி, நேமிசங்களை செலுத்தி அய்யனாரை வழிபட்டனர்.
அய்யனார் வீதி உலா
இரவில் சிறப்பு அலங்கார தீபாராதனையை தொடர்ந்து உற்சவர் அய்யனார் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளி, மேலப்புதுக்குடி கிராம வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள் குமாரசாமி, ஆத்திக்கண், கோபால், உதயகுமார், தினேஷ், செந்தில், நாராயண ராம், கண்ணன் மற்றும் கோவில் நிர்வாகக்குழுவினர், ஊர் மக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story