சார்பதிவாளர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு
ராமநாதபுரம் அருகே இறந்தவர் பெயரில் போலி ஆவணம் தயாரித்து ரூ.40 லட்சம் மதிப்பிலான நில மோசடி தொடர் பாக சார்பதிவாளர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே இறந்தவர் பெயரில் போலி ஆவணம் தயாரித்து ரூ.40 லட்சம் மதிப்பிலான நில மோசடி தொடர் பாக சார்பதிவாளர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.
மோசடி
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள என்மனங்கொண்டான் கிழக்குத்தெரு பகுதியை சேர்ந்தவர் அப்துல்சமது மகன் முகம்மது அமீன் (வயது55). இவரின் தாத்தா உமர்கத்தா என்பவருக்கு சொந்தமான அந்த கிராமத்தில் உள்ள 4.96 ஏக்கர் நிலத்தினை முகம்மது அமீன் பராமரித்து வந்துள்ளார்.
இவரின் தந்தை மற்றும் பெரியப்பாக்கள் ஆகியோர் இறந்துவிட்ட நிலையில் மேற்கண்ட சொத்தினை முகம்மது அமீன் தரப்பினர் அனுபவித்து வந்துள்ளனர். இந்தநிலையில் பூமாலை வலசையை சேர்ந்த கருப்பையா மகன் சாத்தையா, அழகன்குளம் அபுபுக்கர் மகன் முகம்மது இஸ்மாயில் ஆகியோர் கூட்டு சேர்ந்து ராமநாதபுரம் வெளிப்பட்டிணம் சார்பதிவாளர் உதவியுடன் போலி ஆவணம் தாயரித்து மோசடி செய்துள்ளனர்.
வெளிநாட்டில் வசித்து இறந்துபோன மேற்கண்ட முகம்மது அமீன் தந்தையின் சகோதரர்கள் தங்களின் வாரிசுகளுக்கு பொது அதிகாரம் எழுதி கொடுத்தது போன்றும், மலேசியாவில் இறந்துபோன அவர்களின் மகள் உயிரோடு இருப்பது போன்று வாழ்வு சான்றிதழ் பெற்று அதனை வைத்து மோசடி செய்துள்ளனர். இந்த நிலத்தினை ராமநாதபுரம் வெளிப்பட்டிணம் சார்பதிவாளர் அலுவலகத்தின் மூலம் புதுமடம் முனியையா மகன் குமரேசன், முத்து மகன் முனீஸ்வரன் ஆகியோருக்கு 2.97 ஏக்கர் நிலத்தனை விற்று மோசடி செய்துவிட்டார்களாம். இந்த நிலத்தின் மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும்.
புகார்
இதுகுறித்து அறிந்த முகம்மது அமீன் மேற்கண்ட முகம்மது இஸ்மாயில், சாத்தையா, குமரேசன், முனீஸ்வரன், உடந்தை யாக இருந்த புதுமடம் சதீஷ்குமார், 25.6.21 அன்று வெளிப் பட்டிணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியில் இருந்து சார்பதிவாளர் ஆகியோர் மீது ராமநாதபுரம் நிலமோசடி தடுப்பு பிரிவில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமநாதன் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் தேடிவருகிறார்.
Related Tags :
Next Story