திருவள்ளூரில் வருகிற 20-ந்தேதி வீரராகவ பெருமாள் புட்லூர் புறப்பாடு உற்சவம்


திருவள்ளூரில் வருகிற 20-ந்தேதி வீரராகவ பெருமாள் புட்லூர் புறப்பாடு உற்சவம்
x
தினத்தந்தி 18 March 2022 6:19 PM IST (Updated: 18 March 2022 6:19 PM IST)
t-max-icont-min-icon

திருவூரல் மகோத்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. வீரராகவர் பெருமாள் கோவிலில் இருந்து உற்சவர் பெருமாள் விடியற்காலை 5 மணிக்கு புட்லூர் புறப்படுகிறார்.

திருவள்ளூரில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வீரராகவப் பெருமாள் கோவில் உள்ளது. இ்ங்கு ஆண்டுதோறும் வீரராகவ பெருமாள் புட்லூர் கிராமத்திற்கு விஜயம் செய்வது வழக்கம். இது திருவூரல் மகோத்சவம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான திருவூரல் மகோத்சவம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி, அன்றைய தினம் வீரராகவர் பெருமாள் கோவிலில் இருந்து உற்சவர் பெருமாள் விடியற்காலை 5 மணிக்கு புட்லூர் புறப்படுகிறார்.

பின்னர், அங்கு மதியம் 1 மணிக்கு சுவாமிக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. இரவு 9.30 மணிக்கு புட்லூர் கிராமத்தில் திருவீதி புறப்பாடு நடைபெற உள்ளது. பின்னர், மறுநாள் 21-ந் தேதி விடியற் காலை 2 மணிக்கு புட்லூரில் இருந்து வீரராகவ பெருமாள் திருவள்ளூர் கோவிலுக்கு திரும்புவார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கௌரவ ஏஜென்ட் சி.சி. சம்பத் மற்றும் விழாக்குழு சார்பில் செய்யப்பட்டு வருகிறது.


Next Story