வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
வடமாநில தொழிலாளி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஓடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அமீத் பேகரா (வயது 32). இவர் தச்சூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் லேப் டெக்னீசனாக வேலை செய்து வந்தார். இவர் கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனது அண்ணன் அமர் பேகராவுடன் (40) வசித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியே இருந்தபோது மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story