பங்குனி உத்திரத்தையொட்டி காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சிறப்பு பூஜை பக்தர்கள் இளநீர் காவடி எடுத்து வந்தனர்
பங்குனி உத்திரத்தையொட்டி காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சிறப்பு பூஜை பக்தர்கள் இளநீர் காவடி எடுத்து வந்தனர்
மல்லசமுத்திரம்:
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் மாலை திருகாவடிகள் ஆற்றுக்கு புறப்பாடும், இரவில் ஆற்றில் தீர்த்த காவடிகளுக்கு பூஜையும், இரவில் தீர்த்த காவடிகள் கோவில் வந்தடைதலும் நடந்தது. அப்போது 100-க்கும் மேற்பட்ட இளநீர் காவடிகள் அணிவகுத்து வாணவேடிக்கைளுடன் கோவிலை வந்தடைந்தது. ஆங்காங்கே பக்தர்கள் வழிநெடுகிலும் பூஜை செய்து வரவேற்றனர்.
நேற்று காலை முதல் மாலை வரை தீர்த்த அபிஷேகம் பூஜைகள் மற்றும் கோவிலை சுற்றிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் மின் அலங்காரத்தில் சாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் காளிப்பட்டி, மல்லசமுத்திரம், ஆட்டையாம்பட்டி, வீரபாண்டி, அரியானூர், வைகுந்தம், திருச்செங்கோடு, சேலம் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் பூசாரி செல்வகுமார், செயல் அலுவலர் முருகன் ஆகியோர் செய்தனர்
Related Tags :
Next Story