வெயிலின் தாக்கத்தை குறைக்க தீவனத்தில் வைட்டமின் சி, நுண்ணூட்ட சத்துக்களை பயன்படுத்தலாம் ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்
வெயிலின் தாக்கத்தை குறைக்க தீவனத்தில் வைட்டமின் சி, நுண்ணூட்ட சத்துக்களை பயன்படுத்தலாம் என வானிவை ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தி உள்ளது.
நாமக்கல்:
வெயிலின் தாக்கத்தை குறைக்க தீவனத்தில் வைட்டமின் சி, நுண்ணூட்ட சத்துக்களை பயன்படுத்தலாம் என வானிவை ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தி உள்ளது.
வானிலை
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இன்று, நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மற்றும் 22-ந் தேதி என 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை. நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று முதல் 4 நாட்களுக்கு மணிக்கு 6 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும். இன்று தெற்கு திசையில் இருந்தும், நாளை மேற்கு திசையில் இருந்தும் காற்று வீசும். நாளை மறுநாளும், 22-ந் தேதியும் தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீசும்.
வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 102.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 73.4 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக முறையே 65, 70, 65, 65 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக முறையே 40, 50, 45, 40 சதவீதமாகவும் இருக்கும்.
லேசான மழைக்கு வாய்ப்பு
சிறப்பு வானிலையை பொறுத்தவரை அடுத்த 4 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நாளை மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த வாரம் இறந்த கோழிகள் பெரும்பாலும் வெப்ப அயற்சியால் பாதிக்கப்பட்டு இறந்தது கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே பண்ணையாளர்கள் தகுந்த கோடை கால பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும். இதனிடையே கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க தெளிப்பான்களை பயன்படுத்த வேண்டும். மேலும் தீவனத்தில் வைட்டமின் சி மற்றும் நுண்ணூட்ட சத்துக்களை பயன்படுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story