விவசாயி வீட்டில் 40 பவுன் நகை திருட்டு
விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விவசாயி
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் திருபந்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். விவசாயி. இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு மணிவண்ணன் என்ற மகன் உள்ளார். இவர்கள் நேற்று முன்தினம் தங்களது மகன் மணிவண்ணனை பூந்தமல்லி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றனர்.
பின்னர் இரவு வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 பவுன் தங்க நகையும், ரூ.20 ஆயிரமும் திருட்டு போனது தெரியவந்தது.
விசாரணை
இந்த திருட்டு சம்பவம் குறித்து சீனிவாசன் மப்பேடு போலீசில் புகார் அளித்தார். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்த போலீசார் கொள்ளை நடந்த வீட்டில் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைத்து தடயங்கள் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story