பஞ்சாயத்து தலைவருக்கு கொலைமிரட்டல்


பஞ்சாயத்து தலைவருக்கு கொலைமிரட்டல்
x
தினத்தந்தி 18 March 2022 7:36 PM IST (Updated: 18 March 2022 7:36 PM IST)
t-max-icont-min-icon

கொம்மடிக்கோட்டை பஞ்சாயத்து தலைவருக்கு கொலைமிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்

சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜெரோம் மனைவி ராஜ புனிதா. இவர் கொம்மடிக்கோட்டை பஞ்சாயத்து தலைவராக உள்ளார். இந்த நிலையில் சொக்கன்குடியிருப்பு சேர்ந்த சீமான் மகன் ராஜமாணிக்கம், பிரான்சிஸ் மகன் அந்தோணி முத்து ஆகிய 2 பேரும் செல்போனில் ஊராட்சி தலைவரை அவதூறாக பேசியதுடன், கொலைமிரட்டல் விடுத்தார்களாம்.
இதுகுறித்து ராஜ புனிதா கொடுத்த புகாரின் பேரில், தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பென்ஷன் வழக்குப்பதிவு செய்து அந்த  2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்.

Next Story