நீர்த்தேக்க தொட்டி படிகள் இடிந்து விழும் அபாயம்
நீர்த்தேக்க தொட்டி படிகள் இடிந்து விழும் அபாயம்
அனுப்பர்பாளையம்:
திருப்பூர் திருமுருகன்பூண்டி சிறப்புநிலை பேரூராட்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நிர்வாக ரீதியாக நகராட்சியாக செயல்பட தொடங்கினாலும், அலுவலக வளாகத்தில் நகராட்சிக்கான எந்தவித உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படவில்லை. அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அமர்வதற்கு போதுமான இடவசதி செய்து கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில் திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலக வளாகத்தில் பழமையான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. அந்த தொட்டியின் மேல்பகுதிக்கு செல்லும் வகையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தொட்டி பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்பதால் அதில் உள்ள படிக்கட்டுகள் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்த நிலையில் உள்ளன. எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையிலும் காணப்படுகிறது. நகராட்சியில் பணியாற்றும் ஊழியர்கள் அந்த பகுதிக்கு செல்வதற்கு அச்சம் காட்டி வருகின்றனர். எனவே ஆபத்தான நிலையில் உள்ள படிக்கட்டுகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும், இல்லாதபட்சத்தில் நகராட்சி அலுவலகத்தை விரிவுப்படுத்தி பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்றும் பொதுமக்களும், நகராட்சி ஊழியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story