தூத்துக்குடியில் பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
தூத்துக்குடியில் பணம் வைத்து சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முருகபெருமாள் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டல் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டு இருந்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று சூதாடிக் கொண்டு இருந்த தூத்துக்குடியை சேர்ந்த ஜான்சன் (வயது 50), சதீஷ்குமார் (41), கிருஷ்ணமூர்த்தி (56), சிலுவை பிரான்சிஸ் (42), முத்துராமன் (46), ராஜா (48), வள்ளிமுத்து (50) ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.25 ஆயிரத்து 500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story