தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா
தேரிக்குடியிருப்பு கற்குவேல்அய்யனார் திருக்கோவில் பங்குனி உத்திரத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தனர்
உடன்குடி:
தேரிக்குடியிருப்பு கற்குவேல்அய்யனார் திருக்கோவில் பங்குனி உத்திரத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தனர்.
பங்குனி திருவிழா
திருச்செந்தூர் தாலுகா காயாமொழிஅருகே உள்ள தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் திருக்கோவில் பங்குனி உத்திரத் திருவிழா வருடந்தோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த வருடத் திருவிழா கடந்த 17-ந்தேதி மாலை 6 மணிக்கு மாவிளக்கு பூஜையுடன் தொடங்கியது, இரவு 7 மணிக்கு நடந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு, நாட்டில் வறுமை நீங்கிவளம் வேண்டியும், நாட்டு மக்களிடையே சகோதர பாசம் வளரவேண்டியும் பாடல்கள் பாடி சிறப்பு வழிபாடு செய்தனர்.
சிநேற்று காலை 9 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தம் எடுத்துவரப்பட்டது. காலை 10 மணிக்கு வில்லிசை, 11 மணிக்கு சுவாமி கற்குவேல் அய்யனார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் தொடர்ந்து அலங்கார ஆராதனைகள் நடந்தது. கோவிலுக்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
குடும்பத்தினருடன் பக்தர்கள்...
திருவிழாவை யொட்டி சென்னை, கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தினருடன் கார், வேன், பஸ்களில் வந்து 2 நாட்கள் தங்கியிருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் காந்திமதி, தக்கார் அஜித் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story