பருத்தி வயலில் புகையிலை புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்


பருத்தி வயலில் புகையிலை புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
x
தினத்தந்தி 18 March 2022 8:19 PM IST (Updated: 18 March 2022 8:19 PM IST)
t-max-icont-min-icon

பருத்தி வயலில் புகையிலை புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

நீடாமங்கலம்:
பருத்தி வயலில் புகையிலை புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். 
புகையிலை புழு தாக்குதல் 
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் அம்மையப்பன் அருகே பருத்தியூர் கிராமத்தில் புகையிலை புழு தாக்குதல் பருத்தி பயிரில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த புகையிலை புழு தாக்குதலை வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி, திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், உதவி பேராசிரியர் பெரியார் ராமசாமி உள்ளிட்ட பலர் நேரில் பார்்வையிட்டு ஆய்வு செய்தனர். 
இதனை கட்டுப்படுத்துவது குறித்து  திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
மேலாண்ைம முறைகள் 
பருத்தியூர் கிராமத்தில் பருத்தி பயிரில் புகையிலை புழு தாக்குதல் இருப்பது ஆய்வின்போது உறுதி செய்யப்பட்டது. புகையிலை புழுக்களின் தாக்குதல் இரவு நேரங்களில் இலைகள் அனைத்தையும் முழுவதுமாக உண்டு சேதத்தை ஏற்படுத்தும். இதனால் தாக்கப்பட்ட செடிகள் இலைகள் இல்லாமல் முற்றிலுமாக இறக்க வாய்ப்புள்ளது. பருத்தி வயலுக்கு அருகே உளுந்து பயிரிடப்பட்ட வயலில் இருந்து இந்த புழு தாக்குதல் அதிகமாகி சேதத்தை விளைவித்தது கண்டறியப்பட்டுள்ளது. விதைத்த 10-15 நாட்களில் இந்த புழுக்களின் தாக்குதல் அதிகமாக இருப்பதால் விவசாயிகள் இந்த புழுக்களை பார்த்த உடனே கீழ்கண்ட மேலாண்மை முறைகளை பின்பற்ற வேண்டும். 
கைத்தெளிப்பான் 
சூரிய வெளிச்சத்தில் இயக்கக்கூடிய தானியங்கி விளக்கு பொறி வைத்து அந்து  பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். ஒரு எக்டேருக்கு 5 இனக்கவர்ச்சி பொறி வைத்து அந்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். வயலை சுற்றிலும் வரப்பு பயிராக ஆமணக்கு பயிரிட வேண்டும். எஸ்.எல். என்.பி.வி. ஒரு எக்டேருக்கு 500 எல்.ஈ. தெளித்து கட்டுப்படுத்தலாம். செயற்கை  பூச்சிக்கொல்லிகள் ஆன ஸ்பைநிடோரம் 11.7 எஸ். சி. 420 மில்லி அல்லது குலோர்அண்டிரநிலிபிரோல் 18.5 எஸ். சி. 150 மில்லி ஒரு எக்ேடருக்கு கைத்தெளிப்பான் மூலம் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார். 
----


Next Story