நீதிபதி கணவரை தாக்கிய வாலிபர் கைது
நீதிபதி கணவரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
காரைக்குடி,
காரைக்குடி வாட்டர் டாங்க் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் நவின்குமார் (வயது 34). இவர் சென்னையில் ஐ.டி. கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நர்மதா காரைக்குடி குற்றவியல் நீதி மன்றத்தில் நீதித்துறை நடுவராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டு அருகே உள்ள ஒரு ஓட்டலில் இருவரும் சாப்பிட சென்றுள்ளனர். அப்போது காரைக்குடி கல்லுகட்டி பகுதியைச் சேர்ந்த பாலாஜி (23) பர்மா காலனி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (25) ஆகிய 2 பேரும் தங்களது நண்பர்களுடன் அங்கு செல்பி எடுத்து விளையாடிக் கொண்டு இருந்தனர். அவர்களில் ஒருவரிடம் நவின்குமார் வழி விடுமாறு கூறியுள்ளார். அப்போது அவர்களில் ஒருவன் நவீன்குமாரின் மனைவியும் நீதிபதியுமான நர்மதா மீது இடிப்பது போல் வந்துள்ளான் அப்போது நவீன்குமார் அவனை தடுத்து தள்ளி நிற்குமாறு கூறியுள்ளார். அப்போது பாலாஜியும் கார்த்திக்கும் நவீன்குமாரை தாக்கி தள்ளி உள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர். கார்திக்க்கை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story