குப்பைகளால் சுகாதாரக்கேடு


குப்பைகளால் சுகாதாரக்கேடு
x
தினத்தந்தி 18 March 2022 10:14 PM IST (Updated: 18 March 2022 10:14 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் குவிந்து கிடந்த குப்பைகளால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வந்தது. இதனை நகராட்சி தலைவர் நேரில் வந்து பார்வையிட்டு அகற்ற உத்தரவிட்டார்.

கூடலூர்: 

தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இதில் 11, 18, 19 ஆகிய வார்டு பகுதிகளான கன்னிகாளிபுரம், மேட்டுகளம், புதூர் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் மேட்டுகளம் ஓடை மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளி அருகிலேயே குப்பைகளை கொட்டி வருகின்றனர். இந்த குப்பைகள் நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் இருந்தது. இதனால் அந்த பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டது.  

மேலும் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி தலைவர் பத்மாவதியிடம் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் தலைவர் பத்மாவதி அந்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அந்த குப்பைகளை உடனே அகற்ற அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் வீடுகளில் சேரும் குப்பைகளை தினமும் சேகரித்து அகற்றவேண்டும் என்று அறிவுறுத்தினார். அவருடன் நகராட்சி ஆணையாளர் சித்தார்த், சுகாதார ஆய்வாளர் சக்திவேல், கவுன்சிலர்கள்  லோகந்துரை, தேன்மொழி, காந்தாமணி மற்றும் நகராட்சி அலுவலர்கள் சென்றனர். 


Next Story