ஆளும் கூட்டணியை சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுடன் தொடர்பில் உள்ளனர் மத்திய மந்திரி ராவ் சாகேப் தன்வே தகவல்
ஆளும் கூட்டணியை சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுடன் தொடர்பில் உள்ளதாக மத்திய மந்திரி ராவ் சாகேப் தன்வே குற்றம் சாட்டினார்.
மும்பை,
ஆளும் கூட்டணியை சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுடன் தொடர்பில் உள்ளதாக மத்திய மந்திரி ராவ் சாகேப் தன்வே குற்றம் சாட்டினார்.
பா.ஜனதா ஆருடம்
மராட்டியத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து சிவசேனா தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை.
முதல்-மந்திரி பதவிக்கான போட்டியால் நீண்ட கால நட்பு கட்சிகளான பா.ஜனதா, சிவசேனாவின் கூட்டணி பிரிந்தது. தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து மகா விகாஸ் அகாடி என்ற புதிய கூட்டணியை உருவாக்கி சிவசேனா ஆட்சியை கைப்பற்றியது.
இந்தநிலையில் மராட்டியத்தில் விரைவில் புதிய ஆட்சி மலரும் என பா.ஜனதா ஆருடம் கூறி வருகிறது.
25 எம்.எல்.ஏ.க்கள்
இந்த நிலையில் மகா விகாஸ் அகாடி கட்சியின் 25 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுடன் தொடர்பில் உள்ளதாக மத்திய மந்திரி ராவ் சாகேப் தன்வே கூறியுள்ளார். அரசின் நடவடிக்கையில் மகிழ்ச்சி இல்லாததால் அவர்கள் தங்களுடன் தொடர்பில் உள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இருப்பினும் அவர்களின் பெயர்களை வெளியிட மறுத்துவிட்டார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதுகில் குத்தினர்
சிவசேனா தற்போது இந்துத்துவா கொள்கையில் இருந்து விலகிவிட்டது. பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் சிவசேனாவுக்கு வாக்குகள் கிடைத்தது. ஆனால் பின்னர் பா.ஜனதாவை அது முதுகில் குத்தியது.
இன்றைய சிவசேனா பால்தாக்கரேவுடையது இல்லை. இது முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மற்றும் மந்திரி அப்துல் சத்தாரின் சிவசேனாவாகும்.
2019-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக பா.ஜனதா தலைவர்கள் அமித்ஷா, தேவேந்திர பட்னாவிஸ், ஆசிஷ் செலார் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இடையே மாதோஸ்ரீயில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் நானும் கலந்துகொண்டேன்.
அப்போது முதல்-மந்திரி பதவி குறித்து எந்த பேச்சுவார்ததையும் நடைபெறவில்லை. இரு கட்சியினரும் முதல்-மந்திரி பதவியை சுழற்சி முறையில் ஏற்க ஒப்புக்கொண்டதாக சிவசேனா கூறுவதில் உண்மை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story