வரி செலுத்தாத தியேட்டர், கடைகளுக்கு நாளை சீல் வைப்பு


வரி செலுத்தாத தியேட்டர், கடைகளுக்கு நாளை சீல் வைப்பு
x
தினத்தந்தி 18 March 2022 10:34 PM IST (Updated: 18 March 2022 10:34 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் வரி செலுத்தாத தியேட்டர், கடைகளுக்கு நாளை சீல் வைக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளாா்.

திண்டிவனம், 

திண்டிவனம் மரக்காணம் சாலையில் உள்ள கண்ணையா தியேட்டர் சார்பில் கடந்த 5 ஆண்டாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி கட்டவில்லை. இதனால் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 610 பாக்கி உள்ளது. இந்த பாக்கியை செலுத்தக்கோரி நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன் தலைமையில் ஊழியர்கள் தண்டோரா மூலம்  நேரில் சென்று அறிவித்தனர். அப்போது ஆணையர் சவுந்தரராஜன் ஒலி பெருக்கி மூலம் பேசுகையில், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை நாளை(சனிக்கிழமை) காலை 11.30 மணிக்குள் செலுத்த வேண்டும். இல்லையெனில் தியேட்டர், கடைகளுக்கு சீல் வைக்கப்படும். இதேபோல் குடிநீர், வீட்டு வரி, தொழில் வரியையும் பொதுமக்கள் உடனடியாக கட்ட வேண்டும். தவறும் பட்சத்தில் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். அப்போது அவருடன் வருவாய் அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் தேவநாதன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர். 

Next Story