தனியார் போலீஸ் பயிற்சி பள்ளியில் படித்து வந்த இளம்பெண் மாயம்
தனியார் போலீஸ் பயிற்சி பள்ளியில் படித்து வந்த இளம்பெண் மாயம்
அணைக்கட்டு
பள்ளிகொண்டவை அடுத்த ஒதியத்தூர் கும்ளாகுட்டை பகுதியை சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வேலூர் அருகே உள்ள ஒரு தனியார் போலீஸ் பயிற்சி பள்ளியில் படித்து வருகிறார்.
இவருடன் படித்து வந்த திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி இரும்பேடு பகுதியை சேர்ந்த தோழியின் அண்ணன் வினோத் (வயது 22) என்பவரை இளம்பெண் காதலித்து வந்ததாக தெரிகிறது.
இதற்கு இளம்பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று முன்தினம் பயிற்சிக்கு சென்ற இளம்பெண் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் நேற்று பள்ளிகொண்டா போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story