ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீந்தி சென்ற போது கார் டிரைவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீந்தி சென்ற போது கார் டிரைவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்
பென்னாகரம்:
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீந்தி சென்ற போது கார் டிரைவர் தண்ணீரில் அடித்து செல்ப்பட்டார்.
கார் டிரைவர்
வேலூர் மாவட்டம் கம்மவான்பேட்டையை சேர்ந்தவர் கவுதம் (வயது 33). கார் டிரைவர். இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் முரளி, மாதவன், செல்வா, நாராயணன் ஆகியோருடன் காரில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தார். இவர்கள் அனைவரும் ஒகேனக்கல்லில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர்.
பின்னர் முதலை பண்ணை பகுதிக்கு சென்று நண்பர்கள் அனைவரும் காவிரி ஆற்றில் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது கவுதம் காவிரி ஆற்றின் கரையை நீந்தி சென்று கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதில் அவர் திடீரென தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர்.
தேடும் பணி தீவிரம்
ஆனால் கவுதம் தண்ணீரில் வேகமாக அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து அவரது நண்பர்கள் உடனடியாக ஒகேனக்கல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட கார் டிரைவரை தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து பரிசல் ஓட்டிகள், மீனவர்கள் வரவழைக்கப்பட்டு தேடியும் கவுதம் கிடைக்கவில்லை.
அதற்குள் காவிரி ஆற்றில் இருள் சூழ்ந்து விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. கார் டிரைவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தினர் ஒகேனக்கல்லுக்கு விரைந்து வந்தனர். அவர்கள் காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் சோகத்துடன் அமர்ந்து இருந்தனர். இதுகுறித்து ஒகேனக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story