குமரி மாவட்டத்தில் முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்


குமரி மாவட்டத்தில் முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 March 2022 10:56 PM IST (Updated: 18 March 2022 10:56 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி-கல்லூரிகளில் ஹிஜாப் அணிய கர்நாடக ஐகோர்ட்டு தடை விதித்ததற்கு எதிராக குமரி மாவட்டத்தில் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகர்கோவில்,
பள்ளி-கல்லூரிகளில் ஹிஜாப் அணிய கர்நாடக ஐகோர்ட்டு தடை விதித்ததற்கு எதிராக குமரி மாவட்டத்தில் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஐகோர்ட்டு தடை
கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசு உத்தரவு செல்லும் என்று கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.
அதை தொடர்ந்து ஹிஜாப் அணிய கர்நாடக ஐகோர்ட்டு விதித்த தடைக்கு எதிராக குமரி மாவட்டத்தில் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
குளச்சல் பெரியபள்ளி முக்கு சந்திப்பில்  நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அஷ்ரப் தலைமை தாங்கினார். குளச்சல் தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் நிசார், நகர த.மு.மு.க. தலைவர் பி.சாகுல் ஹமீது, நகர பி.எப்.ஐ.தலைவர் எம்.சாகுல் ஹமீது, மாவட்ட ஒய்.எம்.ஜெ.செயலாளர் ஷேக் முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
குளச்சல் முஹல்லம் தலைமை இமாம் அப்துல் சலாம் ஜலாலி, என்.டபிள்யு.எப்.மாநில செயலாளர் மனூபா, ஒய்.எம்.ஜெ.மாவட்ட தாவா குழு புஸ்ரா ஜமீலா ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் த.மு.மு.க. மாவட்ட செயலாளர் அன்வர் சாதத், ஷாலிம் மற்றும் பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தக்கலை
இதே போல் அழகியமண்டபத்திலும் மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு திருவிதாங்கோடு ஜமாத், அஞ்சுவன்னம் ஜமாத் ஆகியவற்றின் நிர்வாகிகள் தலைமை தாங்கினார்கள். சமூகநீதி மாணவர் இயக்க மாநில துணைச்செயலாளர் சுல்பிக்கர் அலி, செய்யது அலி, ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் மாவட்ட குழு பேச்சாளர் புஸ்ரா ஜமீலா ஆகியோர் பேசினார்கள். 
இதில் எஸ்.டி.பி.ஐ. மாவட்ட பொருளாளர் பைசல் அகமது, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகி அப்துல் ஹமீது மேலும் பல்வேறு முஸ்லிம் அமைப்பினர், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். இதையொட்டி தக்கலை துணை சூப்பிரண்டு கணேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story