வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்த 3 பேர் கைது


வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 18 March 2022 11:00 PM IST (Updated: 18 March 2022 11:00 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள கீழையூர் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் தமிழரசன் மகன் வெங்கடேசன்(வயது 32). இவர் நேற்று முன்தினம் இரவு திருக்கோவிலூர் அருகே சடகட்டி கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் வெங்கடேசனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ஆயிரம் ரூபாய் மற்றும் செல்போனை பறித்து சென்றனர். 

இதுகுறித்த புகாரின்பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெங்கடேசனிடம் பணம் மற்றும் செல்போனை பறித்தது பெங்களூரு ஜெய் நகரை சேர்ந்த முத்து மகன்கள் சுனில் குமார்(21), சுரேஷ்(19), திருக்கோவிலூர் போலீஸ் சரகம் கச்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த தண்டபாணி மகன் அரவிந்த்(20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அரவிந்த் உள்பட 3 பேரையும் போலீசார் பிடித்து கைது செய்தனர். இவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள்,  செல்போன் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டது. 

Next Story