டீக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை


டீக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 18 March 2022 11:06 PM IST (Updated: 18 March 2022 11:06 PM IST)
t-max-icont-min-icon

குழித்துறை ரெயில் நிலையத்தில் டீக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து ெகாண்டார்.

நாகர்கோவில், 
கொல்லங்கோடு அருகே உள்ள காஞ்சாபுறம் பகுதியை சேர்ந்தவர் ஆல்வின் (வயது 50). இவர் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இவர் சம்பவத்தன்று குழித்துறை ரெயில் நிலையத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதுபற்றி நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய்குமார், குமார்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆல்வினை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்தபோது விஷம் குடித்தது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு டாக்டா்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். 
இந்த நிலையில் ஆல்வின் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் தொழில் செய்வதற்காக பலரிடம் இருந்து பணம் கடன் வாங்கியுள்ளார். ஆனால், வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ஆல்வின் குழித்துறை ரெயில் நிலையத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தற்கொலை செய்த ஆல்வினுக்கு மனைவி மற்றும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

Next Story