குமரி மாவட்டத்தில் வீடு இல்லாத ஏழைகள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


குமரி மாவட்டத்தில் வீடு இல்லாத ஏழைகள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 18 March 2022 11:09 PM IST (Updated: 18 March 2022 11:09 PM IST)
t-max-icont-min-icon

வீடு இல்லாத ஏழைகள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அரவிந்த் அறிவித்துள்ளார்.

நாகர்கோவில், 
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேரூராட்சி நியூபறக்கின்கால் திட்டப்பகுதியில் 480 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்வதற்கு நகர்ப்புறங்களில் வசிக்கும் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள சொந்த நிலம் மற்றும் வீடற்ற, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்காக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நாகர்கோவில் உதவி நிர்வாக பொறியாளர் அலுவலகத்தை (ஜோசப் கான்வென்ட் பள்ளி எதிரில் பழைய தாலுகா அலுவலகம்) அணுகி பயன்பெறலாம். தகுதியான பயனாளிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஒப்புதல் பெறப்பட்டு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்ய பயனாளிகள் பங்களிப்பு தொகையாக ரூ.76 ஆயிரம் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் 9994042100, 7871941910 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story