ரிஷிவந்தியம் அரசு பள்ளியில் கலெக்டா் ஸ்ரீதர் ஆய்வு
ரிஷிவந்தியம் அரசு பள்ளியில் கலெக்டா் ஸ்ரீதர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களின் வருகை பதிவேடு மற்றும் பள்ளி இடைநின்ற மாணவர்கள் குறித்து கேட்டறிந்த கலெக்டர் ஸ்ரீதர், இடைநின்ற மாணவர்களை அவர்களின் வீட்டுக்கே சென்று பள்ளியில் சேர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்கும்படி ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார்.
அப்போது தலைமையாசிரியர் முரளிதரன், உதவி தலைமை ஆசிரியைகள் உமாராணி, கவிதா, பெற்றோர்,ஆசிரியர் கழக தலைவர் இதயத்துல்லா, ஊராட்சி மன்ற தலைவர் வினிதா மகேந்திரன், வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் சைமன்குமார், ஊராட்சி செயலாளர் ஜெயமுருகன் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர். தொடர்ந்து ரிஷிவந்தியம் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியிலும் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தலைமை ஆசிரியை ஆனந்தி, பெற்றோர்,ஆசிரியர் கழக தலைவர் துரைராஜ் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story