திருப்பத்தூர் அருகே இறந்த மானை இறைச்சியாக்கிய 2 பேர் கைது


திருப்பத்தூர் அருகே இறந்த மானை இறைச்சியாக்கிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 18 March 2022 11:33 PM IST (Updated: 18 March 2022 11:33 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே இறந்த மானை இறைச்சியாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்துார்

திருப்பத்துார் மாவட்டம், ஜவ்வாது மலையில் மர்ம நபர்கள் வனவிலங்குகளை வேட்டையாடி அதன் இறைச்சியை மறைமுகமாக விற்பனை செய்து வருகின்றனர். இந்தநிலையில்  ஜவ்வாது மலை மாம்பாக்கம் வனப்பகுதியில், மான் ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. அதனை 2 பேர் இறைச்சியாக்கி வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். அப்போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட திருப்பத்துார் வனச்சரக அலுவலர் பிரபு மற்றும் வனக் குழுவினர் அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் மட்றப்பள்ளி குமரன் நகரை சேர்ந்த சேட்டு (வயது 54), பெருமாள் (52) என தெரிந்தது. 

இதையடுத்து வனத்துறையினர் அவர்களிடம் இருந்த மான் இறைச்சியை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர். மேலும் இருவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.


Next Story