விஷம் குடித்த முதியவர் சாவு


விஷம் குடித்த முதியவர் சாவு
x
தினத்தந்தி 18 March 2022 11:39 PM IST (Updated: 18 March 2022 11:39 PM IST)
t-max-icont-min-icon

விஷம் குடித்த முதியவர் பலனின்றி சாவு

ஜோலார்பேட்டை,

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த வேட்டப்பட்டு கள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 70). இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் சம்பவத்தன்று விஷம் குடித்துவிட்டார். உடனடியாக அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து துரைசாமியின் மகன் குமரன் கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story