போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கட்டிட பணியை காவலர் வீட்டு வசதி வாரிய இயக்குனர் ஆய்வு

போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கட்டிட பணியை காவலர் வீட்டு வசதி வாரிய இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 18 March 2022 11:39 PM IST (Updated: 18 March 2022 11:39 PM IST)
t-max-icont-min-icon

போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கட்டிட பணியை காவலர் வீட்டு வசதி வாரிய இயக்குனர் ஆய்வு

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை ஐ.வி.பி.எம். பகுதியில் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இதனை தமிழக காவலர் வீட்டு வசதி வாரிய இயக்குநர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரரிடம் தெரிவித்தார்.

ஆய்வின் போது ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், துணை சூப்பிரண்டு பிரபு ‌மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story