விஷம் குடித்து முதியவர் தற்கொலை


விஷம் குடித்து முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 18 March 2022 11:43 PM IST (Updated: 18 March 2022 11:43 PM IST)
t-max-icont-min-icon

நெய்வேலி அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

நெய்வேலி, 

நெய்வேலி அருகே உள்ள ஆயிப்பேட்டை கிழக்குத் தெருவை சேர்ந்தவர் சின்னதுரை(வயது 80). உடல்நலக்குறைவின் காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த இவர் சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

 இதையடுத்து உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story