தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி பொதுமக்கள் குறைகள் பகுதி
குடிநீர் குழாயில் உடைப்பு
வாலாஜாபேட்டை தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள கோர்ட்டு தெரு, கோனேரி தெரு சந்திப்பில் குழாய் உடைந்து வீணாக சாக்கடை கால்வாயில் குடிநீர் வீணாக செல்கிறது. நகராட்சி நிர்வாகம் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும்.
-பிரகலாதன், வாலாஜா.
ஆபத்தான மின்கம்பம்
அரக்கோணம் தாலுகா சித்தாம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட தோப்பு அம்பேத்கர் திடல் எதிரில் மின்கம்பம் ஒன்று சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அந்தக் கம்பத்தை மாற்றி விட்டு புதிதாக கம்பம் நிறுவ வேண்டும்.
-சு.சுந்தரமூர்த்தி, சமூக ஆர்வலர், சித்தாம்பாடி.
பஸ் நிலையத்தில் சுகாதார சீர்கேடு
திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் சென்னை பஸ்கள் நிற்கும் இடத்தில் கழிவுநீர் தேங்கியுள்ளது. சுகாதாரச் சீர்கேட்டால் பஸ்களில் ஏறி அமர்ந்திருக்கும் பயணிகள் துர்நாற்றத்தால் அவதிப்படுவதோடு அவர்களுக்கு தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும்.
-ராஜா, திருவண்ணாமலை.
மின்வாரியத்துறை அதிகாரிகள் கவனிப்பார்களா?
ஆற்காட்டை அடுத்த புதுப்பாடி கிராமத்தில் இரு மின் கம்பங்களுக்கு இடையே மின்கம்பிகள் சரியான முறையில் இழுத்துக் கட்டப்படாததால் காற்றில் ஒன்றோடு ஒன்று சேர்ந்து அடிக்கடி மின்வெட்டு, தீப்பொறி ஏற்படுகிறது. வீட்டில் உள்ள மின்சாதனப் பொருட்கள் பழுதடைகிறது. தற்போது பொதுமக்களே ஒரு கம்பியில் கயிறு கட்டி இரு கம்பிகளும் ஒன்றொடு ஒன்று இணையாதவாறு ஒரு கல்லில் இழுத்துக் கட்டி உள்ளனர். எனவே மின்வாரியத்துறை அதிகாரிகள் இதனை சரி செய்ய வேண்டும்.
-பாலமுருகன், புதுப்பாடி.
டாஸ்மாக் கடையை மாற்ற வேண்டும்
ஆற்காட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. அங்கு மதுபானத்தை வாங்கி அங்கேயே அமர்ந்து குடித்து விட்டு பாட்டில்களை கீழே போட்டு உடைக்கின்றனர். அந்த வழியாக பெண்கள் சென்று வர அச்சப்படுகின்றனர். டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.
-பா.சிவக்குமார், ஆற்காடு.
Related Tags :
Next Story