சிறந்து விளங்கும் விவசாயிகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்


சிறந்து விளங்கும் விவசாயிகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 18 March 2022 11:51 PM IST (Updated: 18 March 2022 11:51 PM IST)
t-max-icont-min-icon

தரிசு நிலங்களில் தோட்டக்கலை பயிர் சாகுபடியில் சிறந்த விவசாயிகளுக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை, 
தரிசு நிலங்களில் தோட்டக்கலை பயிர் சாகுபடியில் சிறந்த விவசாயிகளுக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:- 
விருது 
சிவகங்கை மாவட்டம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பாக தரிசு நிலங்களில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 2021-22-ம் ஆண்டில் மாவட்ட அளவில் சிறந்த விவசாயிகளை தேர்வு செய்து சான்றிதழுடன் முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் சொந்த நிலம் வைத்து இருக்கும் அனைத்து விவசாயிகளும் இதில் பங்கு பெறலாம். 
விவசாயிகளை அவர்கள் பயன்படுத்திய நவீனதொழில் நுட்பங்கள், எந்திரமயமாக்கல், நீர், நில மேலாண்மையில் நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் பாரம்பரிய முறையில் சாகுபடி செய்வதன் அடிப்படையில் மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக்குழு ஆய்வு செய்து தேர்வு செய்வார்கள்.
விண்ணப்பம் 
ஆர்வமுள்ள விவசாயிகள் இதற்கான விண்ணப்பத்தினை www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ அல்லது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலங்களை தொடர்பு கொண்டோ பெற்றுக்கொள்ளலாம். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தபப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலங்களில் வருகிற 21-ந் தேதிக்குள் கொடுக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story