கடல் அரிப்பை ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. ஆய்வு


கடல் அரிப்பை ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. ஆய்வு
x
தினத்தந்தி 18 March 2022 11:55 PM IST (Updated: 18 March 2022 11:55 PM IST)
t-max-icont-min-icon

நாகூர் பட்டினச்சேரியில் கடல் அரிப்பை ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

நாகூர்:
 நாகூரில் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில்  3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசித்து வருபவர்களின் வீடுகள் கடற்கரைக்கு அருகில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி தொடர் மழையால் கடல் கொந்தழிப்பாக காணப்பட்டதால் கடல் அரிப்பு ஏற்பட்டு கடற்கரையில் இருந்த பனைமரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. கடல் நீர் ஊருக்குள் வராமல் இருக்க தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஓ.எஸ்.மணியன் நேற்று பட்டினச்சேரி கடற்கரைக்கு வந்து கடல் அரிப்பு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கடற்கரையில் தடுப்பு சுவர் அமைக்க தமிழக அரசிடம் வலியுறுத்துவதாக மீனவர்களிடம், எம்.எல்.ஏ. கூறினார். இந்த ஆய்வின் போது நாகை நகர செயலாளர் தங்க கதிரவன் மற்றும் அ.தி.மு.க.வினர் உடனிருந்தனர்.

Next Story