அருணாசலேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
திருவண்ணாமலை
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
திருக்கல்யாண உற்சவம்
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
இக்கோவிலில் தீபத் திருவிழா உள்பட பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது.
விழாவையொட்டி கோவில் மூலவர் சன்னதியில் மதியம் சுமார் 12 மணிக்கு மேல் அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் வேதமந்திரங்கள் முழங்க கல்யாண உற்சவம் நடைபெற்றது.
முன்னதாக பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இரவு 8 மணியளவில் கோவில் கொடிமரம் முன்புறம் அருணாசலேஸ்வரரும், உண்ணாமலை அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. பின்னர் உற்சவரும், அம்மனும் திருக்கல்யாண மண்டபத்திற்கு சென்றனர்.
பிறகு இரவு சுமார் 11 மணியளவில் கல்யாண மண்டபத்தில் சாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
பின்னர் நள்ளிரவு தங்க ரிஷப வாகனத்தில் அம்பாளுடன் அருணாசலேஸ்வரர் மாடவீதியில் பவனி நடைபெற்றது.
Related Tags :
Next Story