மோட்டார் சைக்கிள் விபத்தில் 3 பேர் படுகாயம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 19 March 2022 12:30 AM IST (Updated: 19 March 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

நொய்யல், 
புன்னம் சத்திரம் அருகே மூலிமங்கலம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 49). இவர் புகழூர் காகித ஆலையில் ஒப்பந்த கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரும் இவரது மனைவியும் ஒரு வேலையாக ஈரோடு மாவட்டம் கொடுமுடி சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு புன்னம் சத்திரம்- காகித ஆலை சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போதுமசக்கவுண்டன்புதூர் டாஸ்மாக் கடை அருகே வந்து கொண்டிருந்தபோது அதே சாலையில் புன்னம்சத்திரம் நோக்கி எதிர் திசையில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் புகழிநகரைச் சேர்ந்த குமரகுருபரன் என்பவர், புகழூர் காகித ஆலை காலனியை சேர்ந்த செல்வராஜ் (50) என்பவரை பின்னால் அமர வைத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமாக குமரகுருபரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், ரவி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் மோட்டார் சைக்கிள்களில் இருந்து கீழே விழுந்த ரவி, குமரகுருபரன், செல்வராஜ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். ரவியின் மனைவி லேசான காயமடைந்தார். இதையடுத்து படுகாயம் அடைந்த 3 பேரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து ரவி கொடுத்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் குமரகுருபரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story